பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்ததை பதிவு வெளியிட்டு உறுதி செய்த பார்த்திபன்

 

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்ததை பதிவு வெளியிட்டு உறுதி செய்த பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்ற மணிரத்னம் இறங்கியுள்ளார். இதில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம் ,நயன்தாரா, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,  கார்த்தி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில் இதில் நடிகர் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ;வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். 

அதில், ‘படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில் பெருங்களிப்பில்’ பொன்னியின் செல்வன்’. அப்படத்திற்காக Spelling (ஸ்பெல்லிங்) மட்டுமே கற்றிருந்த நான் Swimming (ஸ்விம்மிங்) கற்கிறேன்!” என்று கூறியுள்ளார்.