பொன்னியின் செல்வனில் சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?

 

பொன்னியின் செல்வனில்  சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில், பழுவேட்டரையராக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில், பழுவேட்டரையராக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

பொன்னியின் செல்வன்

ponniyin selvan

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாக கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கி மணிரத்னம் வரை பலரும் அதை சினிமாவாக்க முயன்று வருகின்றனர். 

இரண்டு பாகங்களாக படமாக்கும் மணிரத்னம்

maniratnam

தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமைய பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  அதில் முக்கியமாக குந்தவை,  வந்தியத் தேவன், பழுவேட்டரையர், பூங்குழலி, ஆழ்வார்கடியான்,  நந்தினி உள்பட கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் நடிகர்களை தேர்வு செய்வதிலேயே மிகவும் சிரத்தையாக உள்ளதாம். 

வந்தியத்தேவனாக  கார்த்தி

karthi

 

அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி,வந்தியத்தேவனாக சூர்யாவின் தம்பி கார்த்தி,நந்தினியாக ஐஸ்வர்யாராய்,குந்தவையாக நயன்தாரா நால்வரும் நடிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பழுவேட்டரையர் கேரக்டருக்கு அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவிடம் கேட்டிருக்கிறார் மணிரத்னம். ஏன்  இத்தனை  பெரிய நடிகர்களிடம் பேசினார்கள் என்று கேட்கலாம். 

வயது முதிர்ந்த பழுவேட்டரையர்

pazhuvetaiyar

ஆம். பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர் தான் பழுவேட்டரையர். சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் துறைமுகப்பட்டினங்களில் வரி  விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளையராணியாக்கி கம்பீரமாக வலம்  வருவார். இப்படி பட்ட கேரக்டருக்கு அபிதாப் பச்சனை கேட்டது நியாயம் தானே.  ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே அவரது அடுத்த சாய்ஸ் நடிகர் சத்யராஜ்  தான். மணிரத்னம் மட்டுமில்லாமல் படக்குழுவும் சத்யராஜின் பெயரைத்தான் கூறினார்களாம்.

பழுவேட்டரையருக்கு  உயிர்கொடுப்பார் சத்யராஜ்

sathyaraj

பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து  பிரமிக்க வைத்தவர் சத்யராஜ். அதனால் பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தில் அச்சு அசலாக நடித்து அதற்கு  உயிர்கொடுப்பார் என்று  படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

முன்னதாக ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் வாசிக்க: பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்!