பொன்னமராவதி பிரச்னை; பூச்சி மருந்து குடித்து பெண் காவலர் தற்கொலை முயற்சி

 

பொன்னமராவதி பிரச்னை; பூச்சி மருந்து குடித்து பெண் காவலர் தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு மற்றும் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் ஆகியோர் புதுக்கோட்டை ஆயுதப்படை காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

வாட்ஸ்-ஆப் காணொலியால் கலவரம் நிகழ்ந்த பொன்னமராவதியில், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

po

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் நந்தினி (22). புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். வாட்ஸ்-ஆப்பில் ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் இழிவாக பேசுவது போன்ற காணொலி பரவியதால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்ததில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

pon

காவலர் நந்தினி, கடந்த ஒருவாரமாக பொன்னமராவதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். திடீரென நந்தினி மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார், உடன் பணிபுரிந்தவர்கள் அவரை பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான் அவர் பூச்சி மருந்து குடித்தது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக புதுகோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்தாரா அல்லது வேறு எதுவும் பிரச்னையா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு மற்றும் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் ஆகியோர் புதுக்கோட்டை ஆயுதப்படை காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஜெய்ஹிந்த் தேவி

vvzv

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்துகொண்ட பின்னர் மீண்டும் ஒரு பெண் காவலர் தற்கொலை முயற்சி செய்திருப்பது காவலர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் வாசிக்க: வரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!