பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜி.பி.எப்.) வட்டியை குறைத்த மத்திய அரசு…..

 

பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜி.பி.எப்.) வட்டியை குறைத்த மத்திய அரசு…..

ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜி.பி.எப்.) வட்டியை 0.10 சதவீதம் மத்திய அரசு குறைத்தது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.  தற்போது நிதி அமைப்பில் ஒட்டு மொத்த அளவில் வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை மத்திய அரசு குறைத்தது. இந்த வட்டி விகிதம்தான் மத்திய அரசு பணியாளர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜி.பி.எப்.

2019 ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜி.பி.எப்.) வட்டி 0.10 சதவீதம் குறைத்து 7.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் வைப்புநிதிகளுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.

1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).

2. பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா).

3. அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி.

4. மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி.

5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).

6. இந்திய கட்டளைத் துறை வருங்கால வைப்பு நிதி.

7. இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி.

8. இந்திய கடற்படை கப்பல்துறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி.

9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி.

10. ஆயுதப்படை பணியாளர் வருங்கால வைப்பு நிதி

பணம்

கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தியது. அதன் பிறகு வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும்  செய்யாமல் இருந்தது. இந்நிலையில் இந்த காலாண்டுக்கு ஜி.பி.எப்.க்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.