பொது மக்கள் முன்னிலையில் முன்னாள் மேயருக்கு கன்னத்தில் பளார்! கட்சிக் கூட்டத்தில் மனைவியை அறைந்த பாஜக தலைவர் ! 

 

பொது மக்கள் முன்னிலையில் முன்னாள் மேயருக்கு கன்னத்தில் பளார்! கட்சிக் கூட்டத்தில் மனைவியை அறைந்த பாஜக தலைவர் ! 

பாஜக மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றியதும், பாஜகவை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் நாடு முழுவதும் வன்முறையிலும், சட்ட சீர்கேடுகளிலும் ஈடுபடுவதாக பொது மக்களிடையே பரவலான கருத்து எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்பொழுது நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் நடைப்பெறுகின்ற சம்பவங்களின் செய்திகளும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பொதுமக்களிடையே பரவலாகப் பேசப்படும்.

பாஜக மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றியதும், பாஜகவை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் நாடு முழுவதும் வன்முறையிலும், சட்ட சீர்கேடுகளிலும் ஈடுபடுவதாக பொது மக்களிடையே பரவலான கருத்து எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்பொழுது நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் நடைப்பெறுகின்ற சம்பவங்களின் செய்திகளும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பொதுமக்களிடையே பரவலாகப் பேசப்படும். அப்படி அனைவரின் கண் முன்னாலும், பொது இடத்தில் வைத்து, தன் மனைவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர்.

wife azah singh

டெல்லி, மெஹ்ராலி மாவட்டத்தின்  பாஜக தலைவராக இருக்கிறார் ஆசாத் சிங். நேற்று பந்த் மார்க் பகுதியில் இருக்கும் பாஜகவின் கட்சி அலுவலகத்தில் கட்சி ரீதியிலான கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த கட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக பாஜகவின் மாவட்டத் தலைவரான ஆசாத் சிங், அவருடைய மனைவி சரிதா சவுத்ரியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார். அவருடைய மனைவி, முன்னாள் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கட்சிக் கூட்டத்தில் முடிந்த பிறகு இருவரும் வெளியில் வந்த நிலையில்,  இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் வெளியே, கட்சிக்காரர்களும், கட்சிக் கூட்டத்திற்கு வந்திருந்த தலைவர்களும், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களும் திரளாக இருந்துள்ளனர். இந்நிலையில், வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சத்திற்கு சென்று நிதானத்தை இழந்த ஆசாத் ஆத்திரமடைந்த தனது மனைவியை அனைவரின் கண்முன்னாலும் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவரது மனைவி, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். கட்சிக் கூட்டம் முடிந்து கலகலப்பாக கலைந்துச் சென்ற பாஜக நிர்வாகிகள், ஆசாத்தின் இந்த செயலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 

பின்னர் ஆசாத்தின் இந்த செயல் குறித்து, கட்சிக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் பேசும் போது, “ஆசாத்தும் அவருடைய மனைவியும் ஏற்கெனவே கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் பேசித் தீர்த்திருக்கலாம். இப்படி அனைவர் முன்னிலையிலும் மனைவியை அடித்திருக்க வேண்டாம். அதுவும், அவருடைய மனைவி, இந்த மாநகரின் முன்னாள் மேயராக பணியாற்றியவர். கட்சியிலும் அவரை எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறினார்கள். இந்த சம்பவத்திற்கு பின், ஆசாத் சிங், மெஹ்ராலி மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.