பொது போக்குவரத்துக்குத் தடை… ஏப். 20க்கு பிறகு பிளம்பர், எலெக்ட்ரீஷயின் தொழிலுக்கு நிபந்தனையுடன் அனுமதி! – மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்

 

பொது போக்குவரத்துக்குத் தடை… ஏப். 20க்கு பிறகு பிளம்பர், எலெக்ட்ரீஷயின் தொழிலுக்கு நிபந்தனையுடன் அனுமதி! – மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் வருகிற 20ம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பிளம்பர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட வேலைகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் வருகிற 20ம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பிளம்பர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட வேலைகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

plumbers-78

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் விவரம் வருமாறு:
மே 3ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு (ராணுவ) சேவை தவிர்த்து அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்புப் பணியாளர்கள் தவிர்த்த மற்ற உள்நாட்டு ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது. பொது போக்குவரத்து அதாவது பஸ், மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் திறக்க தடைவிதிக்கப்படுகிறது. 
ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி சேவை, சினிமா தியேட்டர், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஜிம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார், ஆடிட்டோரியம் உள்ளிட்டவை செயல்படத் தடை நீடிக்கிறது.

malls

அனைத்து மத ரீதியான, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
அனைத்து மத ரீதியான வழிபாட்டுத் தளங்களும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி பூட்டப்பட வேண்டும். மத ரீதியான நிகழ்ச்சிகள் கடுமையாக தடை செய்யப்படுகின்றன.
இறுதிச் சடங்கு என்றால் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
அனைத்து மருத்துவப் பணிகளும் (ஆயுஷ் உள்பட) தொடர்ந்து செயல்படும். மருத்துவமனைகள், நர்சிங்ஹோம், கிளீனிக், டெலிமெடிசின் சேவைகள் தொடர்ந்து செயல்படலாம். ஆய்வகங்கள், ஆய்வுக்கூடங்கள், மருந்தகங்கள் செயல்படலாம். கால்நடை மருந்தகங்கள் செயல்படவும் அனுமதிக்கப்படுகின்றன.

pesticide-shop

விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், விநியோக குடோன்கள், விதைகள், உரம், பூச்சிக்கொல்லி தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்படலாம்.
குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள், விதவைகளுக்கான இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆன்லைன் டீச்சிங் மற்றும் பயிற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 
சரக்குகள் போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றன. 
அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், டி.டி.எச், கேபிள் சேவை தொடர்ந்து செயல்படலாம். ஐ.டி மற்றும் ஐ.டி தொடர்பான சேவைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம். அரசின் தகவல் மற்றும் கால் சென்டர்கள் மட்டுமே இயக்கலாம். 
குவாரன்டைன் வசதிகளை உருவாக்க எலக்ட்ரீஷியன், ஐ.டி ரிப்பேர்ஸ், பிளம்பர், மோட்டார் எலக்ட்ரீஷியன், கார்பெண்டர்கள் சேவைகளை பயன்படுத்தலாம்” என்பது உள்பட பல பரிந்துரைகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.