பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்த சென்ற ஸ்ருதி ஹாசன்! வைரலாகும் புகைப்படம்!

 

பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்த சென்ற ஸ்ருதி ஹாசன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்து சென்ற இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்து சென்ற இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும்  வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். 

அது ஒரு பக்கம் இருக்க,சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் லண்டனை சேர்ந்த அவரது காதலருடன் லிவின் டுகெதரில் இருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

shruthi

இந்நிலையில் அண்மையில் கொச்சியில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார். எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தான்  அணிந்துதிருந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆடையை வடிவமைத்தவர் ஜூட்டா மேரி என்றும், தனக்கு ஸ்டைல் செய்தவர் சஞ்சன் பத்ரா என்று  அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வழக்கமான விமர்சனங்கள் எழாமல் இல்லை. இந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக உள்ளது. பட வாய்ப்புக்காக இப்படியொரு கவர்ச்சி ஆடையை ஸ்ருதி அணிந்துள்ளார் என பல்வேறு விமர்சனங்கள் கமெண்டுகளில் இடம்பெற்றுள்ளன. அந்த புகைப்படம் 2 லட்சம் மேல் லைக் பெற்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.