பொது தேர்வுகளில் தமிழ் கட்டாயம் இல்லை: உயர் நீதி மன்றம்!

 

பொது தேர்வுகளில் தமிழ் கட்டாயம் இல்லை: உயர் நீதி மன்றம்!

2022 வரை மொழி வாரி சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் முதன் மொழியாக தமிழ் அல்லாது பிற மொழிகளில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று உயர் நீதி மன்றம் உத்தரவளித்துள்ளது.   

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வழி மாணவர்கள் கூட தமிழை முதற்பாடமாக தேர்வு செய்ய விருப்பப்படுவதில்லை. மற்ற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதால் தமிழ் அழியும் அபாயத்தில் உள்ளது. அதனால், 2006 ஆம் ஆண்டு தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்றும், மாணவர்களின் முதற்பாடமாக தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

Public exam

 

ஆனால் இந்த முடிவை எதிர்த்து, மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் தங்களின் முதன் மொழியாக கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தமிழுக்கு பதிலாக அவரவருக்கு உரிய மொழிகளில் எழுத அனுமதி தர வேண்டும் என்று வழக்குகுகள் பதிவு செய்தன. அதனால் ஏற்கனவே, அதற்கு உயர் நீதி மன்றம்  ஒப்புதல் அளித்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழுக்கு பதிலாக வேறு மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்தது. 

இந்த ஆண்டும் அதே போல், வழக்குகள் எழுந்ததால் அதனை விசாரித்த நீதி மன்றம், 2022 வரை மொழி வாரி சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் முதன் மொழியாக தமிழ் அல்லாது பிற மொழிகளில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று உயர் நீதி மன்றம் உத்தரவளித்துள்ளது.