பொது இடத்தில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. சம்மேளனம் ஒப்புதல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

பொது இடத்தில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. சம்மேளனம் ஒப்புதல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை பொது இடத்தில் நடத்த டென்னிஸ் சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கும் டென்னிஸ் போட்டி வருகிற 29 மற்றும் 30 தேதிகளில் நடக்க இருப்பதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

davis cup

இருநாடுகளுக்கும் இடையே தீவிரவாத தாக்குதல் மற்றும் ராணுவ தாக்குதல் என பெரும் பதட்டமான சூழல் நிலவி வருவதால், பாதுகாப்பு கருதி இந்திய டென்னிஸ் வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். முதல் நிலை வீரர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இரண்டாம் நிலை வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய டென்னிஸ் சம்மேளனம் அணுகியது. அவர்களும் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால் செல்லமாட்டோம் என கோரிக்கை விடுத்ததால், இந்திய டென்னிஸ் சங்கம் அகில உலக டென்னிஸ் சம்மேளனத்திடம் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பொது இடத்தில் நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது. 

tennis

கோரிக்கை கடந்த ஒரு மாதமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இதை கவனித்த உலக டென்னிஸ் சம்மேளனம் இந்திய டென்னிஸ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று போட்டியை பொதுஇடத்தில் நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. போட்டி எங்கு நடக்கும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் உலக டென்னிஸ் சம்மேளனம் கூறியது. 

இதனால் டென்னிஸ் ரசிகர்கள் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

-vicky