பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? வங்கிக் கணக்கு திருடப்படலாம்.. எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட பகீர் வீடியோ !

 

பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? வங்கிக் கணக்கு திருடப்படலாம்.. எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட பகீர் வீடியோ !

பொது இடங்களில் சார்ஜ் போட்டால் வங்கிக் கணக்குகள் திருடப்படலாம் என்று எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் மொபைல் பொங்கல் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டதால், இப்போதெல்லாம் கடைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் சார்ஜ் போடுவதற்கு ஏதுவாக சார்ஜ் பாயின்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களும் அவசர காலங்களில் அதனை பயன்படுத்தி சார்ஜ் போட்டுக் கொள்வதுண்டு. சில சார்ஜ் பாயின்ட்டுகளில் கேபிள் ஒயரோடு இருக்கும். 

ttn

பொது இடங்களில் சார்ஜ் போட்டால் வங்கிக் கணக்குகள் திருடப்படலாம் என்று எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்களில் இருக்கும் USB கேபிள் கொண்ட சார்ஜர்களை உபயோகப் படுத்த வேண்டாம். அவ்வாறு உபயோகப் படுத்தினால், அதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகள் திருடப்படலாம் என்று தெரிவித்துள்ளது. 

 

வங்கி கணக்குகள் திருடப்படாமல் இருக்க, ” முடிந்த வரை உங்களுடைய சார்ஜரை உபயோக படுத்துங்கள். சிறிய அளவிலான பேட்டரிகளை பயன்படுத்துங்கள். USB கேபிளை தவிர்த்து விட்டு, நேரடியாக சார்ஜர் பாயின்ட்டுகளில் இருந்து சார்ஜ் போடுங்கள். சார்ஜ் போடும் போது அது வேறு எந்த சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள்” என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 

ttn

மேலும், ” இலவச தொலைப்பேசி சார்ஜிங் ஸ்டேஷன்கள் உங்கள் மொபைல்களை பாதிக்கலாம். juice jacking என்று சொல்லப்படும் USB கேபிள்கள் மூலம் தகவல்கள் திருடப்படும் தொழில்நுட்பங்களிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.