பொது இடங்களில் பைஜாமா அணிபவர்கள் அரசு இணையதளத்தில் அசிங்கப்படுத்தப்படுவார்கள்! சீனாவில் அரங்கேறும் அவலம்…

பொது இடங்களில் பைஜாமா அணிபவர்கள் அரசு இணையதளத்தில் அசிங்கப்படுத்தப்படுவார்கள்! சீனாவில் அரங்கேறும் அவலம்…

சீனாவில் பொது இடங்களில் பைஜாமா அணியும் ஆண்களை படம்பிடித்து, அரசு இணையதளங்களில் பதிவிடப்பட்டு அந்நாட்டு அரசு அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது. 

சீனாவில் பொது இடங்களில் பைஜாமா அணியும் ஆண்களை படம்பிடித்து, அரசு இணையதளங்களில் பதிவிடப்பட்டு அந்நாட்டு அரசு அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது. 

அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுஜோ நகரில் பைஜாமா அணிபவர்களை கண்டால் அவர்களின் பெயர் புகைப்படங்களை அக்கு வேர் ஆணிவேராக எடுத்து அரசு இணையதளத்தில் பதிவிடுகிறது அந்நாட்டு அரசு. பைஜாமா அணிவது ஒழுங்கற்ற நடத்தை என்று அந்நாட்டு அரசு கருத்து தெரிவிக்கிறது. தெருக்களில் பைஜாமா அணிந்து செல்பவர்களை பொது இடங்களில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா ஸ்கேன் செய்கிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நபரின் பெயர், அடையாள அட்டை மற்றும் பிற தகவல்களை எடுத்து இணையத்தில் பதிவிடுகிறது.

pyjamas

இதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன அரசு பொது இடங்களில் 170 மில்லியன் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 400 மில்லியன் கேமராக்களை பொருத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஆடை கட்டுப்பாடு என்பது அவரவர் தனியுரிமை என்றும், இதில் அரசு தலையிட்டு ஆன்லைனில் அம்பலப்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.