பொது இடங்களில் பண்ற வேலையா இது…! பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸின் அடுத்த வீடியோ!

 

பொது இடங்களில் பண்ற வேலையா இது…! பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸின் அடுத்த வீடியோ!

விருது நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களுக்கு மத்தியில் மனைவி பிரியங்காவிற்கு  நிக் ஜோனாஸ் முத்தம் அளித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

விருது நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களுக்கு மத்தியில் மனைவி பிரியங்காவிற்கு  நிக் ஜோனாஸ் முத்தம் அளித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

priyanka

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். 
திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வந்த  பிரியங்கா விடுமுறை நாட்களில்  கணவர் ஜோனாஸுடன் நேரம் செலவிடுவதும்,  அதற்கான புகைப்படங்களையும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதுமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி  வருகிறார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?✨?✨

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

இந்நிலையில் லாஸ்வேகஸில் பில்போர்ட் இசை விருது விருது இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு  வைரம் போன்று மின்னும் உடையில் பிரியங்காவும்,  நிக் அதற்கேற்ற வகையில் கோட் ஷூட்டும்  அணிந்திருந்தார்.அப்போது நிகழ்ச்சியில் கிடார் வாசித்துக் கொண்டு வந்த நிக், பார்வையாளர்கள் மத்தியில் மனைவி பிரியங்காவிற்கு  உதட்டில் முத்தமொன்று கொடுத்தார். அப்போது பிரியங்கா சோப்ரா வெட்கப்பட்டு சிரித்தார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள்,  ‘சோ க்யூட்..உங்கள் அழகிலிருந்து மீள முடியவில்லை ‘போன்ற கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர். 

 

இந்த வீடியோவானது  தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. மேலும் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் பில்போர்ட் இசை விருதில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தங்களுடைய இண்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.