பொதுமக்களுக்கு தண்ணீர் தரக்கூடாது | ஸ்டிக்கர் பாய்ஸ் அட்டூழியம்

 

பொதுமக்களுக்கு தண்ணீர் தரக்கூடாது | ஸ்டிக்கர் பாய்ஸ் அட்டூழியம்

தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர் இல்லாமல் வறட்சியில் தள்ளாடுகிறது. இவ்வளவு காலம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே இணை, துணை,சைடு, அப்பர், லோயர் அமைச்சர்கள் எல்லாம் கவனம் செலுத்தியதால் இந்தக் கோடை சென்னையை வெய்யிலோடு சேர்த்து, ‘உங்கள் வியர்வைத் தண்ணீர் மட்டும் தான் பாக்கி’ என்கிற ரீதியில் சபித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர் இல்லாமல் வறட்சியில் தள்ளாடுகிறது. இவ்வளவு காலம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே இணை, துணை,சைடு, அப்பர், லோயர் அமைச்சர்கள் எல்லாம் கவனம் செலுத்தியதால் இந்தக் கோடை சென்னையை வெய்யிலோடு சேர்த்து, ‘உங்கள் வியர்வைத் தண்ணீர் மட்டும் தான் பாக்கி’ என்கிற ரீதியில் சபித்திருக்கிறது.

water

தண்ணீர் பஞ்சத்தால் பாதி உணவங்களில் இன்று விடுமுறை போர்டை நிரந்தரமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்று  அடுத்த கட்ட மூதலீடுகளில் அரசு பிஸியாகிவிட, இருக்கும் நிறுவனங்கள், துண்டைக் காணோம்… துணியைக் காணோம் என்கிற ஓடுகின்றன. இந்நிலையில், ஆவடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர், அந்தப் பகுதியின் மக்களுக்கு வழங்குவதற்காக நேற்று 16-06-2019 காலை 08 மணியளவில் 25000 லிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொண்டு டேங்கர் லாரியில் அப்பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

councellor

அப்போது தண்ணீர் வண்டியை மறித்த பலராமன் என்பவர், “நான் தான் இந்தப் பகுதி கவுன்சிலர், என்னைக் கேட்காமல் நீங்கள் எப்படி தண்ணீர் வழங்கலாம்” எங்கள் பகுதியில் உங்கள் கட்சியை வளர்க்கப் பார்க்கிறீர்களா? என்றும் மிரட்டியுள்ளார். (கடந்தமுறை அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தில் நின்று ஆவடி 8வது வட்ட நகரமன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்). அதற்கு, ‘நீங்கள் தற்போது கவுன்சிலர் இல்லை, முன்னாள் கவுன்சிலர் தான் என்றும், எங்கள் கட்சி பெயர் பொறித்த மேல்சட்டை தான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீர் விநியோகிக்கிறோம்! மிகுந்த சிரமத்திற்கிடையே தூரத்திலிருந்து பெருஞ்செலவு செய்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்துள்ளோம்! தண்ணீரைக் கொடுக்காமல் சென்றால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 
பின்னர் அந்த நபர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர், ‘இது குடிப்பதற்கு உகந்த நீர் என்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ளீர்களா? தண்ணீர் வண்டிக்கு லைசென்ஸ் உள்ளதா? தண்ணீர் விநியோகம் செய்ய முன் அனுமதி பெற்றுள்ளீர்களா?’ என்று சரமாரியாக கேள்விகேட்டு விசாரணைக்கு கூட்டிச்செல்வதாகவும் தண்ணீர் ஏற்றிவந்த டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். 

women

தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பொதுமக்கள்,  உதவி செய்ய வந்தவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டதை உணர்ந்து காவல்துறையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திரளத் தொடங்கியதும் நிலைமை பெரிதாவதை உணர்ந்த திருமுல்லைவாயில் காவல் கண்காணிப்பாளர், தண்ணீரை வழங்க அனுமதித்துவிட்டு இனிமேல் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டுமானால் மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும் என்று எச்சரித்து சென்றனர்.
ஒரே தெருவில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் தர பிரச்சினை செய்யும் நாம் தான், கேரளாவும், கர்நாடகாவும் தண்ணீர் தர மறுக்குதுன்னு வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம்.