பொதுமக்களுக்குப் போக்குவரத்தில் எந்த வித இடையூறும் இருக்காது: சென்னை காவல்துறை தகவல்..

 

பொதுமக்களுக்குப் போக்குவரத்தில் எந்த வித இடையூறும் இருக்காது: சென்னை காவல்துறை தகவல்..

பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி இந்திய மற்றும் சீன அதிபர்கள் மாமல்லபுரத்திற்கு வரவிருப்பதால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

 

India and China president

இது குறித்து சென்னை காவல்துறை பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் வருகையின் போது போக்கு வரத்து நிறுத்தம், போக்குவரத்து வழி மாற்றம், கல்வி நிறுவனங்கள், வியாபார தளங்களை மூடுதல் போன்ற எந்த விதமான தகவல்களும் சென்னை பெருநகர காவல்துறை அளிக்கவில்லை. அதனால், பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது. 

Madras police