பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு எதிரான மனு தள்ளுபடி! 

 

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு எதிரான மனு தள்ளுபடி! 

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை: பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள பிரகாசம் சாலையின் 33 அடியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாகக் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

தற்போது இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது 33 அடி பொது சாலை என மனுதாரர்கள் குறிப்பிடும் இடத்திற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டிடம் பொதுப்பாதையில் கட்டப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.