பொதுத்தேர்வு விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

 

பொதுத்தேர்வு விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நாடு முழுக்க கொரோனா தொற்றுநோய் பரவியதால் ஊரடங்கு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நாடு முழுக்க கொரோனா தொற்றுநோய் பரவியதால் ஊரடங்கு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் 10ம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ttn

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்ககோரி நானும் மாணவரணி செயலாளரும் பள்ளி கல்வித்துறை செயலரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் அமைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் மனுஅளிப்பர் என்றும் இதை வெற்றிதோல்வியாக கருதாமல் மாணவர்களின் நலனை மனதில்கொண்டு அரசு முடிவெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

–