பொதுத்தேர்வு: குழந்தைகளுக்கு தேர்வு பயத்தைக் காட்டுகிறது – கமல்ஹாசன்!

 

பொதுத்தேர்வு: குழந்தைகளுக்கு தேர்வு பயத்தைக் காட்டுகிறது – கமல்ஹாசன்!

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “ தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமையானது, பத்து வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டிவைப்பது.

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “ தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமையானது, பத்து வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டிவைப்பது. இந்த கல்வித் திட்டம் எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தைச் சொல்லிக்கொடுக்கும்.

kamal

இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயமும் மன அழுத்தமுமே அதிகரிக்கும்.  சாதிகளாலும், மதங்களாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட, மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்பொழுது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது, ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும்.

 

மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராத 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  நான், எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால், இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் அமல்படுத்தும்  பொதுத்தேர்வு தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.