பொதுத்துறை வங்கிகள் இணைப்பு ஏன்? உண்மையை சொன்ன மத்திய நிதித்துறை செயலர் …

 

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு ஏன்? உண்மையை சொன்ன மத்திய நிதித்துறை செயலர் …

நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவ பெரிய வங்கிகள் தேவை. அதற்காகதான் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்பட்டது என மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 10 பொதுத்துறை வங்கிகளை நான்காக ஒருங்கிணைக்கும் செயல்முறை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மேலும் புதிய இந்தியாவின் நிதிசேவை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான வங்கிகள் எண்ணிக்கையை உருவாக்கியுள்ளது. 2017ல் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ஆக இருந்தது. தற்போது 12ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை

நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளின் சரியான எண்ணிக்கை இதுவாகும். நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவ பெரிய வங்கிகள் அவசியம்.  இந்த நோக்கத்தை எட்டுவதை இலக்காக கொண்டே கடந்த மாதம் 30ம் தேதி மெகா இணைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடா

மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், வங்கிதுறையில் நிலவிய மோசமான வாராக்கடன் நிலவரம் தற்போது மாறியுள்ளது. கடந்த நிதியாண்டில் வாராக்கடன் ரூ.1.06 லட்சம் கோடி குறைந்துள்ளது. ரூ.1.21 லட்சம் கோடி கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது. நான் எடுத்த சரிசெய்யும் முயற்சியால் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபத்தை காட்டியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.