‘பொண்ணுங்க’னா ட்ரெஸ் மாத்துற மாதிரி உன்னால மாத்த முடியும்’: கவின் மீது கடுங்கோபத்தில் வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் 

 

‘பொண்ணுங்க’னா ட்ரெஸ் மாத்துற மாதிரி உன்னால மாத்த முடியும்’: கவின் மீது கடுங்கோபத்தில் வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் கவினுடன் காதல் வாய்ப்பட்டு சாக்ஷி செய்த சில செயல் மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியதால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லாஸ்லியா- கவின் போடும் ஆட்டம் ரசிகர்களால் பார்க்க முடியவே இல்லை. அவர்கள் செய்வது ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ் மேட்ஸ்க்கும் எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இவர்களின் காதலை கண்ட சாக்ஷி முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sakshi recent video ?? @iamsakshiagarwal

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

அதில், ‘கவினிடம் 3 கேள்விகளை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். நான் வந்து உங்களிடம் காதலை கூறவே இல்லை. எல்லாத்தையும் செய்துவிட்டு நான் எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் நியாயமா? லாஸ்லியாவிடம் நான் ஜெயிலில் இருந்த சமயத்தில் அனைத்தையும் கூறிவிட்டேன், ஆனால் எதையுமே சொல்லவில்லை சொல்வது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடைசியில் பொண்ணுங்கனா ட்ரெஸ் மாத்துற மாதிரி உன்னால மாத்த முடியும்.. என்று பேசியுள்ளார்.