பொண்டாட்டி அதிகம் சம்பாதிச்சா…கணவனுக்கு உடல்நிலை பாதிக்குமாம்!

 

பொண்டாட்டி அதிகம் சம்பாதிச்சா…கணவனுக்கு உடல்நிலை பாதிக்குமாம்!

கணவன் – மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் கணவன் – மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்போது கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை  வாழ முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பிள்ளைகளைக் கூட சரியாக கவனிக்காமல் கணவன் மனைவி இருவரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

money

என்னதான் மனைவி வேலைக்கு  போய் குடும்ப பாரத்தை பகிர்ந்து கொண்டாலும், மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 6000-க்கும் மேற்பட்ட கணவன் மனைவிக்கிடையேபாத் பல்கலைக்கழகம் சமீபத்தில்   ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குடும்பத்திற்காக 40% சம்பாதித்தால் பிரச்சனை  இல்லை. அதுவே அதற்கு மேல் பெண்கள் சம்பாதிக்கும் போது  கணவன்மார்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.  

money

திருமணத்திற்கு முன்பு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஆண்கள், திருமணத்திற்குப் பிறகு குடும்ப நிர்வாகம் வணிக ரீதியாகப் பெண்களிடம் செல்லும் போது, அது ஆண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சில குடும்பங்களில் சாதக நிலை மாறி இந்த மன உளைச்சல், விவாகரத்து வரை செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.