பொண்டாட்டிங்க தொல்லை தாங்க முடில; ஆண்களுக்கு ஹெல்ப் லைன் உருவாக்குங்க.. அலற வைத்த கடிதம்!

 

பொண்டாட்டிங்க தொல்லை தாங்க முடில; ஆண்களுக்கு ஹெல்ப் லைன் உருவாக்குங்க.. அலற வைத்த கடிதம்!

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

ஊரடங்கு உத்தரவினால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கினால் மக்கள் அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் என்று ஒரு புறமிருக்க மற்றொரு பக்கம், குடும்ப பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பொண்டாட்டி தொல்லை தாங்க முடியவில்லை, ஆண்களுக்காக ஹெல்ப் லைன் எண் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

ttn

அந்த கடிதத்தில், ஊரடங்கால் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் ஆண்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்  ஆண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மனைவிகள் சட்டங்களை காட்டி ஆண்களை பயமுறுத்துவதால் ஆண்கள் மிக பரிதாபமான நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிராயுதபாணியாக இருக்கும் ஆண்களால் புகாரும் கொடுக்க முடியவில்லை. இதனை வெளியே சொல்லவும் முடிய வில்லை. இத்தகைய இன்னல்களை சந்தித்து வரும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸை விட குடும்ப இன்னல்களால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த பட்சம் ஆண்களுக்காக ஒரு ஹெல்ப் லைன் எண்ணை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.