பொடுகு தொல்லையா… இதையெல்லாம் செய்யாதீங்க…!

 

பொடுகு தொல்லையா… இதையெல்லாம் செய்யாதீங்க…!

தலை முடி பராமரிப்பதில் இடையூறாக இருக்கும் முதல் பிரச்சினையே தலையில் உண்டாகும் பொடுகுதான். இது தலையில் ஈஸ்ட் உருவாகி அதனுடன் தலையில் உள்ள எண்ணெய் பசையுடன்  சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. காய்ந்த தலைசருமம் பராமரிப்பின்றி விடுவதால் பொடுகை வரவழைக்கிறது. 

தலை முடி பராமரிப்பதில் இடையூறாக இருக்கும் முதல் பிரச்சினையே தலையில் உண்டாகும் பொடுகுதான். இது தலையில் ஈஸ்ட் உருவாகி அதனுடன் தலையில் உள்ள எண்ணெய் பசையுடன்  சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. காய்ந்த தலைசருமம் பராமரிப்பின்றி விடுவதால் பொடுகை வரவழைக்கிறது. 

dry hair

இதனால் தலை அரிப்பு, முடி உதிர்வு,பிம்பிள்ஸ்,சரும பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது. இது பலபேருக்கு பெரிய பாதிப்பாய் இல்லாவிட்டாலும் சிலருக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பொடுகு, முடி வளர்ச்சியை தடைசெய்யாது, மாறாக வளரும் முடிகளை பலவீனமானதாக வளரவைக்கும்.இதுவே மிகப்பெரிய தாக்குதல்.வளரும் முடிகளும் பொடுகின் பாதிப்பினால் உதிர்ந்துவிடும்,பலர் போடுகிற்கு பலவிதமான ரெமெடிகளை கூறுவர். ஆனால் அவை ஏந்தளவிற்கு பலனளிக்கும் என்று தெரியாது. சிலர் கூறும் பொதுவான நிவாரணம் ‘தலைக்கு எண்ணெய் தேய்த்து குளியுங்கள்’ ஆனால் இதை செய்யவேண்டாம்! இது பொடுகை குறைக்காது மாறாக இன்னும் பிரச்னையை அதிக படுத்திவிடும்.

oil hair

மேலும் பொடுகு காய்ந்த சருமத்தினால் மட்டும் உருவாவதில்லை. இது அதிக ஈஸ்ட் உற்பத்தியினால் ஏற்படுகிறது.இது அதிக எண்ணெய் தேவைப்படவைக்கும் மேலும் காய்ந்த சருமத்தை இன்னும் பாதித்து அதிக பொடுகை உருவாக்கி விடும். அதிக எண்ணெய் தடவுவதால் ஈஸ்ட் அதிகரித்து பரவி எண்ணெய்யில் உள்ள சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிடுகளில் பரவ செய்கிறது. ஆதலால் எண்ணெய் பயன்பாட்டை சற்று குறைத்தால் பொடுகின் பாதிப்பும் குறையும். 

சில டிப்ஸ் உங்களுக்காக:

ஆஸ்பிரினை உடைத்து அதை உங்கள் தினசரி உபயோகிக்கும் ஷாம்பூவில் உபயோகப்படுத்த பொடுகின் தாக்கம் சற்றுதனியும்.

tea tree oil

மேலும் டீ ட்ரீ எண்ணெய் பொடுகை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த நிவாரணி, மார்க்கெட்டுகளில் விற்கப்படும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பூக்களில் டீ ட்ரீ ஆயில் சேர்க்கப்பட்டிருக்கும். இவை பொடுகை அடியோடு அழிக்கும் ஆற்றல் கொண்டது.

ஆதாலால்,இனியும் எண்ணெய்யை உபயோகித்து தவறான ரெமெடிகளை உபயோகிக்காமல் சரியான முறைகளை பயன்படுத்தி போகுகை போக்குங்கள். மேற்கூறிய இந்த டிப்சுகளை பயன்படுத்தி பாருங்கள்.