பொடுகு தொல்லையா ? அப்போ உங்களுக்கு இந்த நியூஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும் பாஸ்!

 

பொடுகு தொல்லையா ? அப்போ உங்களுக்கு இந்த நியூஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும் பாஸ்!

சமையலில் கட்டாயம் இடம்  பெற்றிருக்கும் ஒரு பொருள் இஞ்சி

சமையலில் கட்டாயம் இடம்  பெற்றிருக்கும் ஒரு பொருள் இஞ்சி. இஞ்சியை சமையலில் சேர்ப்பதன்  மூலம் உணவின் ருசி அதிகரிக்கிறது. இஞ்சி டீ புத்துணர்ச்சியை அளிப்பதுடன், செரிமான கோளாறையும் சீர் செய்கிறது.  இது தவிர  உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இஞ்சி பயன்படுகிறது. 

ginger

அந்த அளவிற்கு இஞ்சியில் மருத்துவ குணம் அதிகம். அதுமட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு உள்ள பிரச்னை  பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு. இதை நீக்கவும், தலை அரிப்பைக் கட்டுப்படுத்தவும் கூட இஞ்சி நல்ல மருந்தாக இருக்கும். 
 
செய்முறை 

ginger

  • இஞ்சியை எடுத்துப் பொடிப் பொடியாக வெட்டி,  தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும்.  சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கியதும்  அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி நீரை தனியே எடுத்து வைக்கவும்.

ginger

  • சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து நேரடியாகத் தலை முடியின் வேர்க்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும் .
  • அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இப்படி ஊறவைத்து விட்டு ஷாம்பு தேய்த்துக் குளிக்கவும். இப்படி வாரம்  ஒருமுறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்றவை முற்றிலும் நீங்கிவிடும்.