பொங்கல் விடுமுறையில் மோடியின் உரையைக் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக் கல்வித்துறை

பொங்கல் விடுமுறையில் மோடியின் உரையைக் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக் கல்வித்துறை

பொங்கல் விடுமுறையில் மோடியின் உரையைக் கேட்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொங்கல் விடுமுறையில் மோடியின் உரையைக் கேட்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடித்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி அதாவது பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என  தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

மோடி

ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாடப்போகிறார். இதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் மோடியின் உரையை கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஜனவரி 16 ஆம் தேதி விடுமுறை எடுக்காமல் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.