‘பொங்கல் விடுமுறைக்கு நீங்க சென்னையில இருப்பீங்களா’..மெட்ரோ கொடுத்த ஹேப்பி நியூஸ் !

 

‘பொங்கல் விடுமுறைக்கு நீங்க சென்னையில இருப்பீங்களா’..மெட்ரோ கொடுத்த ஹேப்பி நியூஸ் !

விடுமுறை என்றாலே ஜாலி தான். அரசு விடுமுறை வேலை நாட்களில் வந்தா மக்கள் எல்லாரும் டபுள் ஹேப்பி.

விடுமுறை என்றாலே ஜாலி தான். அரசு விடுமுறை வேலை நாட்களில் வந்தா மக்கள் எல்லாரும் டபுள் ஹேப்பி. இந்த வருடம்  பொங்கல் பண்டிகை தொடர்ந்து வேலை நாட்களிலேயே வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்குக் கிட்டத்தட்ட ஒரு வாரம் லீவ் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நேற்று தொடங்கிய நிலையில், மக்கள் எல்லாம் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். அதனால், சென்னை கிட்டத்தட்ட மக்கள் இல்லாமல்  வெறிச்சோடி நிலையில் உள்ளது. 

ttn

சென்னையில் இருக்கும் கொஞ்ச மக்களையும் ஈர்ப்பதற்காகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையின் மூன்று நாட்களும் அதாவது 15,16,17 ஆகிய 3 நாட்களும் மெட்ரோவில் பயணம் செய்தால் 50% சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, காணும் பொங்கல் (ஜனவரி 17) அன்று மக்கள் அதிகமாகச் சென்னை மெரினா கடற்கரை செல்வார்கள் என்பதால் மெட்ரோ ஸ்டேஷன்களில் இருந்து மெரினா செல்ல கேப் வசதி ஏற்பாடு செய்துள்ளது. இதனால், எந்த மெட்ரோ ஸ்டேஷனில் ஏறினாலும் இறங்கினாலும் அங்கிருந்து கேப் மூலம் மெரினா கடற்கரை செல்லலாம்.