பொங்கல் பண்டிகையை வரவேற்க மேலூர் கரும்புகள் ரெடி..விலை தான் கொஞ்சம் அதிகம் !

 

பொங்கல் பண்டிகையை வரவேற்க மேலூர் கரும்புகள் ரெடி..விலை தான் கொஞ்சம் அதிகம் !

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கரும்புகள் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கரும்புகள் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் சூரக்குண்டு, எட்டிமங்கலம், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கரும்பு அனுப்பப்படுகிறது.

ttn

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததன் காரணமாகக் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை மழை செழிப்பாகப் பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி கரும்பு உற்பத்தி அமோகமாக நடந்துள்ளது. இது குறித்துப் பேசிய வியாபாரி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான செலவு அதிகமாகியுள்ளது. அதனால், இந்த ஆண்டு விலை சற்று உயர்ந்தே இருக்கும்.

ttn

15 கரும்பு இருக்கும் ஒரு கட்டு ரூ.400க்கு விற்கிறோம். ஒரு லாரிக்கு 20 கட்டுகள் கட்டு வரை ஏற்றுகிறோம். அதற்கு வண்டி கூலியே ரூ.800. பொங்கல் நெருக்கத்தில் கூலி இன்னும் உயர்ந்து விடும். ஒரு ஏக்கருக்குக் கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு கரும்பின் தரமும், மகசூலும் நன்றாக உள்ளதால் ஒரு லாரி கரும்பு ரூ.6000 வரை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.