பொங்கல் பண்டிகையை கொண்டாடாதீங்க… கிறிஸ்துமஸில் பங்கேற்ற திருமா கோரிக்கை..!

 

பொங்கல் பண்டிகையை கொண்டாடாதீங்க… கிறிஸ்துமஸில் பங்கேற்ற திருமா கோரிக்கை..!

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய விசிக தலைவர் பொங்கல் பண்டிகை கொண்டாடக்கூடாது எனத் தெரிவித்து இருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய விசிக தலைவர் பொங்கல் பண்டிகை கொண்டாடக்கூடாது  எனத் தெரிவித்து இருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. 

thiruma

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, CAA, NPR & NRCக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகளும் ஜனநாயக சக்திகளும் தவிர்க்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

அவரது இந்தக் கருத்துக்கு எதிராக பொங்கல் ஒண்ணும் மோடி அமித்ஷா கொண்டு வந்த பண்டிகை இல்ல புறக்கணிக்க!!! அப்ப அரசு கொடுக்கும் பொங்கல் பரிசை உங்கள் கட்சி காரர்கள் வேண்டாம் என்று சொல்வார்களா? ஆங்கில வருடபிறப்பு கொண்டாட்டத்தை நாங்களும் விரும்புவதில்லை, உங்களுக்கு ஏது பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவது எங்கள் தமிழர் வழக்கம், அதை உன் சுயலாபத்துக்கு வேண்டி கொண்டாடமல் இருக்க மாட்டோம்.stalin

நீங்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் கிறிஸ்துமஸ் கொண்டாடினீர்கள்..? அதை புறக்கணித்து இருக்கலாமே..? பொங்கலை கொண்டாடக்கூடாது எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்.? உங்களுக்கு CAA, NRCபிடிக்கவில்லை என்றால் நீங்கள் கொண்டாடாமல் இருந்துக்கோங்க… எங்களைக் கொண்டாடக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.