பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போகணுமா? சிறப்பு பேருந்துகள் விவரம் உங்களுக்காக!

 

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போகணுமா? சிறப்பு பேருந்துகள் விவரம் உங்களுக்காக!

கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

பொங்கல் பண்டிகைக்காகச் சென்னையிலிருந்து 4,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.  இதனால் மக்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

ttn

வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை  தினமும்  இயங்கும்  2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,950 சிறப்பு பேருந்துகள் என  சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு மொத்தம்  7,175 பேருந்துகள்  தினந்தோறும் இயங்கும்.  அதேபோன்று பிற ஊர்களிலிருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 16ஆம் தேதி முதல் 19ம் தேதி  பிற ஊர்களிலிருந்து வரை சென்னைக்கு 4500 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார். 

பேருந்து தடங்கள்  மற்றும் ஊர்கள் 

ttn

  • மாதவரம் புதிய பேருந்து நிலையம் – ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துள் 
  • கே.கே.நகர் பேருந்து நிலையம் – கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் 
  • தாம்பரம் சானடோரியம் – திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் 
  •  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் – திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் 
  • பூந்தமல்லி பேருந்து நிலையம் – வேலூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் 
  • கோயம்பேடு பேருந்து நிலையம் – மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை 

முன்பதிவு  விவரம் மற்றும் தொடர்புக்கு

  • சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு – 17 முன்பதிவு மையங்களுடன் ஜனவரி 9 ஆம் தேதி தொடக்கம்
  •  பேருந்து இயக்கம் குறித்து அறிய : 9445014450, 9445014436