பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று துவக்கம்

 

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று துவக்கம்

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று துவங்கவுள்ளது

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று துவங்கவுள்ளது.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பொதுவாகவே பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் திருநாளை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பி செல்வர். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையிலிருந்து மட்டும் மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு கவுன்டர்கள் ஜனவரி 9-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் இன்று திறக்கப்படுகின்றன.