‘பொங்கல் திருநாள்’.. முதல்வர், துணை முதல்வர் மக்களுக்கு வாழ்த்து !

 

‘பொங்கல் திருநாள்’.. முதல்வர், துணை முதல்வர் மக்களுக்கு வாழ்த்து !

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான ‘பொங்கல் திருநாள்’ இன்று ” பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கிணங்க போகிப் பண்டிகையுடன் தொடங்கியது.

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான ‘பொங்கல் திருநாள்’ இன்று ” பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கிணங்க போகிப் பண்டிகையுடன் தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் பொங்கல் திருநாளை தங்களது குடும்பங்களுடன் கொண்டாடி மகிழச் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், மக்களுக்குப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ttn

அதில்,”  தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தனிச்சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழாவை உலகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் எங்களது அன்பார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பொங்கல் புதுநாள் போன்றதோர் பொன்விழா இந்த உலகத்தில் வேறு எங்கும் இல்லை. அதை ” மகிழ்ச்சியுடன், புதியதோர் பொலிவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கல் புது நாளுக்கு ஒப்பான விழா எங்குமில்லை” என்று பூரிப்புடன் நமது அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியுள்ளார். பொங்கல் விழா நம்மை எல்லாம் தலை நிமிரச் செய்யும் தமிழர் விழா. குடும்பம் குடும்பமாக அன்புடன் வளர்க்கும் பசுவும் கன்றும் ஒருசேர தங்கள் அன்பு குரலெழுப்ப எல்லாரும் கொண்டாடி மகிழ்வோம். 

ttn

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கலிட தேவையான பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறது. கழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளை பெற்று செல்லும் கோடான கோடி மக்கள் தங்கள் நெஞ்சார, வாயார புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசை வாழ்த்துவதாக கேட்கையில் எங்கள் இதயம் பெருமகிழ்ச்சி அடைகிறது. நம் மக்களுக்கு இன்னும் பல நற்பணிகளை ஆற்றிட வேண்டும் என்ற மன உறுதி பிறக்கிறது மக்களுக்கு தொண்டு ஆற்றும் புது சக்தி பிறக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளனர்.