பொங்கலை முன்னிட்டு சுண்ணாம்பு விற்பனை தீவிரம் ! உரிய விலை கிடைக்காததால் மானியம் வழங்கவேண்டும் என கோரிக்கை !

 

பொங்கலை முன்னிட்டு சுண்ணாம்பு விற்பனை தீவிரம் ! உரிய விலை கிடைக்காததால் மானியம் வழங்கவேண்டும் என கோரிக்கை !

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 15ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் தங்களது வீட்டிற்கு புதிதாக சுண்ணாம்பு அடித்து வர்ணம் பூசுவது வழக்கம். எனவே இந்த சமயத்தில் சுண்ணாம்பு, பெயிண்ட் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக இருக்கும்.

limestone

அதே சமயம் சுண்ணாம்புக்கான தேவை அதிகரித்திருப்பதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 75க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு காளவாய்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் சுண்ணாம்பு கல் வர்ணம் பூசுவதற்கு விற்கப்படுகிறது. பல கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து சுண்ணாம்பு வாங்கி செல்லும் நிலையில் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் சுண்ணாம்பு தேவை  குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

lime stone

கடந்த சில ஆண்டுகளாக சுண்ணாம்பு கல்லுக்குண்டான உரிய விலை கிடைப்பதில்லை எனக் கூறும் உற்பத்தியாளர்கள், பொங்கல் பண்டிகையின் போதுதான் தொழிலாளர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். பிற பண்டிகை நாட்களில் குறைந்த அளவில் விற்பனை நடைபெறுகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் பெயின்ட் அடிப்பதால் சுண்ணாம்பு விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 25 கிலோ எடை கொண்ட சுண்ணாம்புக் கல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொழிலாளர்களின் கூலித்தொகை போக லாபம் குறைவாக உள்ளதால் சுண்ணாம்பு உற்பத்தி நலிவடையாமல் இருக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்