பொங்கலூரில் களைகட்டிய ஷோடச மகாலட்சுமி யாகம் !

 

பொங்கலூரில் களைகட்டிய ஷோடச மகாலட்சுமி யாகம் !

திருப்பூரினை அடுத்துள்ள பொங்கலூரில் ஷோடச மகாலட்சுமி யாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூரை அடுத்த பொங்கலூரில் தொழில்வளம் பெருகுவதற்கும் விவசாய வளர்ச்சி அடைவதற்கும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகிடவும், உலக நன்மை பெற வேண்டியும் இந்து முன்னணி சார்பில் சோடஷ மகாலட்சுமி மகாயாக பெருவிழா கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 

asvametha yagam

அதனையடுத்து திருவிளக்கு பூஜையும் பின்னர் கஜபூஜையும் அதனைதொடர்ந்து 108 அஸ்வ பூஜைகளும் நடைபெற்றது .

இந்த அஸ்வ பூஜையில் 200க்கும் அதிகமான குதிரைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு அதன் பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தம் அனைத்து குதிரைகள் மீதும் தெளிக்கப்பட்டது.

அதன் பின்னர் குதிரைகளுக்கு மலர் மாலை மற்றும் பட்டு வஸ்திரம் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் குதிரைகளின் காலில் அட்சதை போட்டு வழிபாடு செய்தனர். 

sodasa yagam

இவ்விழாவில் மிகவும் சிறப்பான முறையில் யாக பூஜை நடை பெற்றது . இந்த யாக பூஜையில் பழவகைகள், மூலிகைகள், பவளம், முத்து, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பட்டுச் சேலைகள் திருமாங்கல்யம் ஆகிய சீர்வரிசைகளை, யாக குண்டத்தில் சமர்ப்பித்து  யாக பூஜை செய்தனர்.

அதனையடுத்து மகாலட்சுமி தாயாருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது . இந்த பூஜையில் வெள்ளியில் செய்த மகாலட்சுமி சிலையை பிரதிஷ்டை செய்து 500 கிலோ துளசி மற்றும், 500 கிலோ செவ்வந்தி பூக்களை கொண்டு, புஷ்பாஞ்சலி வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தாயாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

mahalakshmi yagam

யாகசாலை பூஜை, கஜபூஜை மற்றும் அஸ்வ பூஜைகள் நிறைவடைந்த பின் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கஜ பூஜையில் பங்கு பெற்ற யானை லட்சுமி மற்றும் அனைத்து குதிரைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு பழம், கனி வகைகளுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இந்து முன்னணியை சேர்ந்த தலைவர்களும் திருப்பூர் மற்றும் பொங்கலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த எராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.