பொங்கலுாரில் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் 

 

பொங்கலுாரில் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் 

திருப்பூர் அருகே பொங்கலுாரில் வரும் 23ம் தேதி மகாலட்சுமி மகா யாகம் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மிகவும் விரிவாக செய்துள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூரை அடுத்த பொங்கலுாரில் தொழில்வளம் பெருகுவதற்கும் விவசாய வளர்ச்சி அடைவதற்கும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகிடவும், உலக நன்மை பெற வேண்டியும் இந்து முன்னணி சார்பில் வரும் 23 முதல், 25 வரை கோமாதா பூஜையும் அஷ்வ பூஜையும் சோடஷ மகாலட்சுமி மகாயாகமும் நடத்தப்படுகின்றது .

yagam

இந்த விழா 23 ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கி காலை 8:00 மணிக்கு கஜபூஜையும் 10:00 மணிக்கு 108 குதிரைகளை கொண்டு அஷ்வ பூஜையும்  மாலை 3:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

அதனையடுத்து 24 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு 1,008 நாட்டு மாடுகளை கொண்டு கோமாதா பூஜையும் மாலை, 3:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணமும்  நடைபெறுகிறது. 

அதனை தொடர்ந்து  25ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு சோடஷ மகாலட்சுமி மகாயாகமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு பசுவுக்கும் தனி தனியாக தடுப்பு அமைக்கப்பட்டு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பசுமாடுகள் நிறுத்தப்பட உள்ளது. 

yagam

மூன்று நாட்கள் நடைபெறும் ஆன்மீக விழாவில் பங்குபெறும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க, 100 கவுன்டர்கள், 50 இடங்களில் ராட்சத குடிநீர் தொட்டி, 15 இடங்களில், பெரிய எல்.இ.டி., டிவி, 500 நடமாடும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 17 இடங்களில் பார்க்கிங் வசதியும் ஏழு இடங்களில் பிரமாண்ட நுழைவாயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.