பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினியின் அண்ணாத்த!

 

பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினியின் அண்ணாத்த!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது  திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.  டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக திரைத்துறைப் பணிகள் முழுவதும் முடங்கியுள்ளன. அதன் பல படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு பொங்களுக்கு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், 2020-ம் ஆண்டு பொங்களுக்கு ரஜினி நடித்த தர்பார் படமும் திரைக்கு வந்தது குறிப்பிடதக்கது