‘பொங்கலுக்கு பராக்’: இது சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ பொங்கல்!

 

‘பொங்கலுக்கு பராக்’: இது சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ பொங்கல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரஜினிகாந்த்-சிம்ரனின் ‘பேட்ட’ போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், ‘பேட்ட’ பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவிருப்பதாக புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் ஊட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங், சென்னை, லடாக், ஐரோப்பா, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.