பொங்கலுக்கு குடும்பத்திற்கு ரூ. 3000… எடப்பாடி அதிரடி..!

 

பொங்கலுக்கு குடும்பத்திற்கு ரூ. 3000… எடப்பாடி அதிரடி..!

தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலம் 2000 ஆயிரமும், அதிமுக கட்சி சார்பாக 1000 ரூபாயும் வழங்க எடப்பாடி முடிவெடுத்துள்ளார்

உள்ளாட்சி தேர்தலை பொங்கல் பண்டிகை கழித்து வைத்து கொண்டால் நன்றாக இருக்கும். அதற்குள் வறட்சி நிவாரணம், பொங்கல் பண்டிகை பணம் என்று மக்களை குளிப்பாட்டிவிட்டால் அது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று  அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமான பணப்பட்டுவாடா மட்டுமில்லாமல் தேர்தல் அன்று கொடுப்பதும் வாக்காளர்களை நம் பக்கம் திரும்ப வைக்கும் என்று கூட்டி கழித்து கணக்கு போட்டு பொங்கல் கழித்து தேர்தலை வைக்க யோசித்து இருக்கிறார்கள். அத்தோடு தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலம் 2000 ஆயிரமும், அதிமுக கட்சி சார்பாக 1000 ரூபாயும் வழங்க எடப்பாடி முடிவெடுத்துள்ளார்edappadi

 ஆனால் நீதிமன்ற உத்தரவை காட்டிய சிலர் அதற்கு வாய்ப்பு இல்லை என்று எடுத்துக் கூறி இருக்கிறார்கள். எனினும் இறுதி முடிவு டிசம்பர் 13ம் தேதி தான் தெரியும். தேர்தல் தள்ளிப்போவதாக அவருக்கு நெருக்கமாக உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வழியாக ராமதாஸூக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.

அதனால் கவிதை வடிவில் அறிக்கை விடாமல் ஹைகூ வடிவில் டிவிட்டரில் சின்னதாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாராம் ராமதாஸ். அதில் ஆபத்து என்று சொன்னது உள்ளாட்சி தேர்தலுக்காக, அதிமுக- பாமக கட்சிக்கும் கூட்டணி பிரச்னையில் ஆபத்து என்று எடுத்துக் கொள்வதா? என்ற சந்தேகம் இரு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு ஓடுகிறது.