பொங்கலுக்கு இத்தனை நாட்கள் லீவா..? காசு பணத்தை எடுத்து கையில் வைச்சுக்கோங்க..!

 

பொங்கலுக்கு இத்தனை நாட்கள் லீவா..? காசு பணத்தை எடுத்து கையில் வைச்சுக்கோங்க..!

பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் , சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் தொடர்ந்து வருவதால் 10 நாட்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக கூறப்படுகிறது.

அதிக விடுமுறை நிறைந்த மாதங்களில் முதலிடத்தில் உள்ளது ஜனவரி. பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் , சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் தொடர்ந்து வருவதால் 10 நாட்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு  விடுமுறை வருவதாக கூறப்படுகிறது. 

ஆனாலும் இந்த விடுமுறை மாநிலங்கள், வங்கிகளை பொறுத்து மாற வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வங்கிகளுக்கு ஞாயிற்றுகிழமைகளிலும், மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கை.  விடுமுறை நாட்கள் காரணமாக ஏடிஎம் இயந்திரங்களில், முன்னரே போதிய அளவு பணம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2020 ஜனவரியில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை. பல மாநிலங்களில் உள்ளூர் பண்டிகையின் போது விடுமுறை அளிக்கப்படும்.bank

ஜனவரி 1  புதன், புத்தாண்டு 2ம் தேதி வியாழன், கேரளாவில் மன்னம் ஜெயந்தி. அதே தினம்  பல மாநிலங்களில் குரு கோபிந்த் சிங் பிறந்த நாள். ஜனவரி 11 – சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை.

ஜனவரி15 – புதன் போகி, பொங்கல், மகர சங்கராந்தி – தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிராங்களில் கொண்டாடபடுகிறது. திருவள்ளுவர் தினம் – தமிழகம், புதுச்சேரியில் ஜன.,16 – வியாழக்கிழமை. ஜனவரி 17  வெள்ளிக்கிழமை உழவர் திருநாள். 23 – வியாழன்  மே.வங்கம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் – நேதாஜி பிறந்த நாள்.

ஜன.,25 – நான்காவது சனி. ஜனவரி 30ம் தேதி வியாழன், வசந்த பஞ்சமி விழாக்கள் கொண்டாடப்படுவதால் இம்மாதம் ஜனவரியில் 10 நாட்களுக்கு அதிகமாக விடுமுறைதினங்கள் வருகிறன.