பைரவரை ஏன் அஷ்டமியில்  வழிபடச் சொல்கிறார்கள்?

 

பைரவரை ஏன் அஷ்டமியில்  வழிபடச் சொல்கிறார்கள்?

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி. பொதுவாக நாம் அஷ்டமியன்று எந்த நல்ல காரியங்களையும் செய்வதில்லை. இறைவனின் ஆணைப்படி உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியைச் செய்பவர்கள் அஷ்ட லட்சுமிகள்.  

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி. பொதுவாக நாம் அஷ்டமியன்று எந்த நல்ல காரியங்களையும் செய்வதில்லை. இறைவனின் ஆணைப்படி உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியைச் செய்பவர்கள் அஷ்ட லட்சுமிகள்.  

bhairavar

சொர்ண பைரவரிடம், சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு இவர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள்.அப்படி அவர்கள் பெற்ற சக்திகள் குறைய குறைய, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்களது சக்தியை அஷ்ட லட்சுமிகளும் பெருக்கி கொள்ளுகின்றார்கள். 
அஷ்டமி தினத்தன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவர் வழிபாட்டில் ஈடுபட்டு விடுவதால், அவர்களால் அஷ்டமியன்று நடைபெறும் நல்ல காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடிற்கு சிறப்பானது. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும்  தேய்பிறை அஷ்டமி பைரவரை வணங்குவதற்கு மிகவும் சிறந்த நாள்.
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், மாதுளை பழ முத்துக்களுடன் தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம்,  நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம் முதலியவை வைத்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். மிக அரிதாக, சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு, இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனிதோஷம் நீங்க பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

bhairavar

தேய்பிறை அஷ்டமி தினத்தில்   பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் இந்த  12 திருப்பெயர்களை கூறி பைரவ வழிபாட்டை செய்யவும்:
1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
4. ஓம் பக்தப்ரிய நமஹ
5. ஓம் பக்த வச்ய நமஹ
6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
7. ஓம் ஸித்தித நமஹ
8. ஓம் கருணாமூர்த்தி நமஹ
9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
12. ஓம் ரசஸித்தித நமஹ

bhairavar

சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் இந்த 12 திருப்பெயர்களை மிக முக்கியமானதாக சொல்கிறார்கள். 
இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் அனைத்து பொற்குவியலையும் வழங்குவார் என பைரவ கல்பம் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து சொல்லி வந்தால், மந்திரமாகவும், அப்படியே பெயர்களை மட்டுமே சொல்லி வந்தால் ஜெபமாகவும் கொள்ளப்படும்.
மந்திர ஜெபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நாம ஜெபத்திற்கு கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இதே 12 பெயர்களை 9 முறை சொன்னால் 108 தடவைகள் என்றாகும். இந்த திருப்பெயர்களை சொல்வதன் மூலம் சொர்ண பைரவரின் அருள் மிக எளிதில் கிடைக்கும்.