‘பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன்’ : நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

 

‘பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன்’ : நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பைக், வீடு எனச் சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன்’ : நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

சென்னை: எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பைக், வீடு எனச் சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 50ஆண்டுகளைக் கடந்த கதாசிரியர் கலைஞானத்துக்கு  பாரதிராஜா தலைமையில்  நேற்று பாராட்டுவிழா நடந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவில், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், கதாசிரியர் கலைஞானத்திற்கு ரஜினிகாந்த்  தங்கச்சங்கிலி அணிவித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. கதையில் ஏதாவது  சிக்கல் என்றால் உடனே அவர்கள் கலைஞானத்தை தான் அழைப்பார்கள். அவர் கதை சொல்லும் விதமே தனி. தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட  வேண்டும். இயக்குநர்களும்  கதாசிரியர்களின்  பெயர்களை முன்னிலைப்படுத்திப் போடவேண்டும். படத்திற்கு அஸ்திவாரமே அவர்கள்தான், ஆனால்  அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படுவது சாபமானது’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே  நினைத்தேன்.ஆனால்  திடீரென்று ஹீரோவாக நடிக்க என்னை அழைத்தபோது அதிர்ச்சியடைந்தேன். பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது’ என்று ரஜினி தன்னுடைய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.