பைக் திருடர்களை விரட்டிச் சென்று பிடித்த கன்னட நடிகர்! – பெங்களூருவில் நடிகர் நிஜத்தில் ஹீரோ ஆன சம்பவம்

 

பைக் திருடர்களை விரட்டிச் சென்று பிடித்த கன்னட நடிகர்! – பெங்களூருவில் நடிகர் நிஜத்தில் ஹீரோ ஆன சம்பவம்

பெங்களூருவில் கன்னட நடிகர் ரகு பட் பைக் திருடர்களை விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பெங்களூரு யஷ்வந்த்பூரைச் சேர்ந்தவர்கள் மொஹின் கான் (26), அப்துல் ஃபஹிம் (19). பெங்களூரு உல்சூர் ஏரி பகுதியில் கத்தி முனையில் கார் டிரைவர் ஒருவரிடம் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, படம் பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்த கன்னட நடிகர் ரகு பட் இந்த சம்பவத்தைக் கண்டுள்ளார். யாரோ மூன்று பேர் சாலையில் நின்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களைக் கடந்து சென்றது அவரது கார்

பெங்களூருவில் கன்னட நடிகர் ரகு பட் பைக் திருடர்களை விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பெங்களூரு யஷ்வந்த்பூரைச் சேர்ந்தவர்கள் மொஹின் கான் (26), அப்துல் ஃபஹிம் (19). பெங்களூரு உல்சூர் ஏரி பகுதியில் கத்தி முனையில் கார் டிரைவர் ஒருவரிடம் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, படம் பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்த கன்னட நடிகர் ரகு பட் இந்த சம்பவத்தைக் கண்டுள்ளார். யாரோ மூன்று பேர் சாலையில் நின்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களைக் கடந்து சென்றது அவரது கார். அப்போது, ரகுவின் மனைவி, ஒருவன் கையில் கத்தி வைத்துள்ளான். அதனால் வழிபறிபோல உள்ளது என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனால், யூடேர்ன் அடித்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளார் ரவி. அதற்குள்ளாக திருடர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். அவர்களை விடாமல் ரவி பட்டும் தொடர்ந்துள்ளார். அதே நேரத்தில், ரவியின் மனைவி போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் திருடர்கள் செல்லும் வழியையும் கூறினார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அருகிலிருந்த பேட்ரோல் வாகனத்துக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு கிலோ மீட்டர் தூரம் விடாமல் துரத்திச் சென்றுள்ளார் பட். அப்போது மோசமான சாலை காரணமாக வேகமாக சென்ற பைக் நிலை தடுமாறி விழுந்துள்ளது. இதில், பைக்கில் இருந்த இருவரும் காயம் அடைந்தனர். சுதாரித்து எழுந்த குற்றவாளிகள், தப்பி ஓட முயன்றனர். அதற்குள்ளாக அங்கு வந்த போலீசார் குற்றவாளிகளை மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து ரகு பட் கூறுகையில், “வழிபறி கொள்ளை நடந்துகொண்டிருந்த போது அந்த சாலையில் பல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஆனால் யாரும் என்ன நடக்கிறது என்று கேட்கவில்லை, உதவிக்குக் கூட வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

actor-raghu-bhat

கைது செய்யப்பட்ட மொஹிதின் மற்றும் ஃபாஹிமிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அதிலும் குறிப்பாக மொஹிதின் மீது 27 வழக்கு நிலுவையில் உள்ளது தெரிந்தது. மேலும், அன்று காலை சாந்திநகர் பேருந்து நிலையம் அருகில் இவர்கள் கொள்ளை அடித்தது தெரிந்தது. அன்று காலை, சாந்திநகர் பஸ் நிறுத்தத்திற்குப் பயணியை இறக்கிவிட இன்னோவா காரில் வந்துள்ளார். அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போனை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். மேலும், தங்களை பின் தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காக காரின் சாவியையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பல குற்றச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்ட வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.