பைக்கை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள்! – இளைஞர்களுக்கு ராமதாஸ் அட்வைஸ்!

பைக்கை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள்! – இளைஞர்களுக்கு ராமதாஸ் அட்வைஸ்!

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. ஆனாலும் அது பற்றிய அச்சம் பொது மக்களிடம் இல்லை. சர்வ சாதாரணமாக வீட்டைவிட்டு வெளியேவந்து ஊர் சுற்றுவது தொடர்கிறது. குறிப்பாக இளைஞர்கள் காலியாக உள்ள சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க இளைஞர்கள் வெளியே வரக்கூடாது, தங்கள் இருசக்கர வாகனத்தை வீட்டுக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. ஆனாலும் அது பற்றிய அச்சம் பொது மக்களிடம் இல்லை. சர்வ சாதாரணமாக வீட்டைவிட்டு வெளியேவந்து ஊர் சுற்றுவது தொடர்கிறது. குறிப்பாக இளைஞர்கள் காலியாக உள்ள சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார்.

tamilnadu-lockdown-82

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்: உங்கள் இரு சக்கர ஊர்திகளை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள். அத்தியாவசியத் தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் அவை சாலைகளை எட்டிப் பார்க்கக் கூடாது. அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு!

இளைஞர் சக்தி நினைத்தால் இமயத்தையும் இழுத்து வர முடியும். அப்படிப்பட்ட உங்களால் தான் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முடியும். நாட்டு மக்களின் உயிர்கள் உங்கள் கைகளில் இருப்பதாக கருதிக் கொள்ளுங்கள். அவர்களை பாதுகாப்பதற்காக சாலைகளுக்கு வராமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழுங்கள்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக கடைபிடியுங்கள். சமூக இடைவெளிக்கு உதாரணமாக வாழுங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்குங்கள். அரசுக்கு முழுமையாக ஒத்துழையுங்கள். விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் காண உதவுங்கள்!” என்று கூறியுள்ளார்.