பைக்கில் வந்த இளைஞரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 

பைக்கில் வந்த இளைஞரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள்.  

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில்  முடங்கி யுள்ளனர். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். மாடிக்களில் நின்று கொண்டு இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள்.  

t

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம்  அண்ணா நகரை சேர்ந்தவர் பரசுராமன். இவர் நேற்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில்  அம்பத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டது  வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில்  வந்து கொண்டிருந்த அவரின் கழுத்தை  மாஞ்சா நூல் பலமாக அறுத்துள்ளது. 

tt

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.  பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தவர்கள் பரசுராமனை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார், விசாரணை செய்து  வருகின்றனர்.