பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்திய 20 நாடுகள்! லிஸ்ட்டில் இந்தியா இருக்கா? 

பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்திய 20 நாடுகள்! லிஸ்ட்டில் இந்தியா இருக்கா? 

அமெரிக்கா உள்பட 20 நாடுகளில்  டேட்டிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உள்பட 20 நாடுகளில்  டேட்டிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிண்டர், ட்ரூலி மேட்லி, ஹாப்பன் போன்ற டேட்டிங் செயலிகள் போன்று பேஸ்புக் நிறுவனம்  டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களுக்கு பிடித்த இணையை இதன் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். டேட்டிங் சேவையில் இணைந்த நண்பரையோ, அல்லது பின்தொடர்பாளர்களில் யாரேனும் ஒருவரையோ சீக்ரெட் கிரஸ் என்ற பெயரில் உள்ள பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். 

facebook

இந்த வசதி அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா , லாவோஸ், மலேசியா, மெக்சிகோ, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுரினாம், தாய்லாந்து, உருகுவே, வியட்னாம் மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கு அடுத்து  ஆண்டுமுதல் அமலுக்குவரும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.