‘பேஸ்புக் காதல்’.. எனக்கு அவர் தான் வேணும்.. 4 அடி உயர வாலிபரை மணந்து கொண்ட பெண் : வியக்கவைக்கும் லவ் ஸ்டோரி!

 

‘பேஸ்புக் காதல்’.. எனக்கு அவர் தான் வேணும்.. 4 அடி உயர வாலிபரை மணந்து கொண்ட பெண் : வியக்கவைக்கும் லவ் ஸ்டோரி!

பாய் பெஸ்டி, ப்ளே பாய்ஸ் என்று ஆண்களும் பெண்களும் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மாடர்ன் காலத்தில் இப்படியும் ஒரு காதலா என்று வியக்க வைக்கிறது இந்த லவ் ஸ்டோரி. 

தினந்தோறும் நாம் பல பேஸ்புக் காதல் கதைகளைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஆனால் இந்த கதை சற்று மாறானது என்றே சொல்லலாம். பாய் பெஸ்டி, ப்ளே பாய்ஸ் என்று ஆண்களும் பெண்களும் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மாடர்ன் காலத்தில் இப்படியும் ஒரு காதலா என்று வியக்க வைக்கிறது இந்த லவ் ஸ்டோரி. 

tn

சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் இளம் பெண் பவித்ராவுக்கு பேஸ்புக் மூலம் விக்னேஸ்வரன் என்ற நண்பர் கிடைத்துள்ளார். பேஸ்புக்கில் யாரும் அவர்களுடைய முழு உருவம் தெரிந்த போட்டோ வைப்பதில்லை அல்லவா.. அதே போல விக்னேஸ்வரனும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விக்னேஸ்வரன் பி.சி.ஏ. முடித்து விட்டு ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறாராம். தினமும் இவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கையில், இவர்களுக்குக் காதல் மலர்ந்துள்ளது. விக்னேஸ்வரனின் உயரம் தெரியாமலே காதலித்து வந்த பவித்ராவுக்கு இடையில் அவரது உயரம் 4 அடி தான் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர்கள் இரண்டு மனமும் ஒத்து போகி விட்டதால் நான் உன்னையே மணந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பவித்ரா. 

ttn

இதனையடுத்து இரண்டு பேரும் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்க, பவித்ராவின் பெற்றோர் இவர்களது காதலை ஏற்கவில்லையாம். ஆனால் அவர் தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வந்த பவித்ரா ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி விக்னேஸ்வரனுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இரண்டு பேரும் அடைக்கலம் கேட்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குத் திருமணம் நடந்ததை அறிந்த பவித்ராவின் உறவினர்கள், பவித்ராவை தன்னுடன் வரும் படி அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்ததால் எங்களுக்கு இவள் பெண்ணே இல்லை என்று கூறி அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அதன் பின் பவித்ரா விக்னேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். 

ttn

உடம்பில் இருக்கும் குறையை பாராமல் நான் காதலித்தவரை தான் நான் மணந்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்து விக்னேஸ்வரனை மணந்து கொண்ட பவித்ரா-விக்னேஸ்வரன் தம்பதிக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.