பேஸ்புக்கில் புகைப்படத்தில் பார்த்தது போல ஸ்டைலாக இல்லை…. நேரில் காதலை நிராகரித்த கல்லூரி மாணவி!

 

பேஸ்புக்கில் புகைப்படத்தில் பார்த்தது போல ஸ்டைலாக இல்லை…. நேரில் காதலை நிராகரித்த கல்லூரி மாணவி!

கண்டதும் காதல் என்கிற காலம் எல்லாம் மலையேறி போய், பார்க்காமலேயே காதல் கொள்கிற பேஸ்புக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேரில் பார்த்து, பேசி பழகிய பின்னர் திருமணம் செய்துக் கொள்கிற பலரும் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நிற்கிற பாஸ்ட் புட் காலத்தில் வாழ்கிறோம் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

கண்டதும் காதல் என்கிற காலம் எல்லாம் மலையேறி போய், பார்க்காமலேயே காதல் கொள்கிற பேஸ்புக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேரில் பார்த்து, பேசி பழகிய பின்னர் திருமணம் செய்துக் கொள்கிற பலரும் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நிற்கிற பாஸ்ட் புட் காலத்தில் வாழ்கிறோம் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நிச்சயித்த திருமணத்தை விட, காதலித்து திருமணம் செய்துக் கொள்வது தற்போது நண்பர்கள் மத்தியில் ஒரு கம்பீரமான செயலாக இருக்கிறது. அப்படி காதல் திருமணங்கள் பெருகி வருவது ஒரு பக்கம், சமூக ஏற்றத் தாழ்வுகளை சமன்படுத்த உதவுகிறது என்று பெருமைப்பட்டாலும், அல்பாயுசில் அரைகுறையாக  பருவ வயது கவர்ச்சியில் வருகிற காதல்களை எல்லாம் நம்பி, திருமணம் செய்து கொண்டு பெரும்பாலோர் தவித்து வருகிறார்கள். அப்படி பேஸ்புக்கில் பழகிய இளைஞரை, காதலித்து, நேரில் பார்த்து காதலைத் துறந்திருக்கிறார் ஒரு பெண்.

facebook love

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அவரது முகநூல் பக்கத்தில் துடிப்புடன் பங்கெடுத்திருக்கிறார். இந்நிலையில், தனது முகநூல் நண்பரான திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தொடர்ந்து நட்பாக பேசி வந்திருந்திருக்கிறார். இவர்களது நட்பு முகநூல் மூலமாகவே நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. கோவை மாணவியும், இளைஞர் பதிவேற்றும் புகைப்படங்களை எல்லாம் பார்த்து, ரசித்து, லைக்ஸ்களையும், ஹார்ட்டின் சிம்பள்களையும் அள்ளி தெறித்திருக்கிறார். இந்நிலையில், முகநூல் காதலர்கள் இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
கோவையில் மாணவி படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிக்கு அருகில் இளைஞரை நேரில் வரச் சொல்லி, அதன் பிறகு இருவரும் ஜோடியாக வெளியில் கிளம்பிச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். திருவள்ளூர் இளைஞரும், தன் காதலியான கோவை கல்லூரி மாணவியின் பேச்சை நம்பி, திருவள்ளூரில் இருந்து கோவை கிளம்பிச் சென்று, மாணவியின் கல்லூரி அருகே காத்திருந்திருக்கிறார். முகநூல், புதிது புதிதாக வெளியாகியிருக்கும் செயலிகளின் உதவியுடன் தன் புகைப்படங்களை மேலும் அழகுப்படுத்தி பதிவேற்றியிருந்த இளைஞர், புகைப்படங்களில் பார்த்ததைப் போல நேரில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இளைஞரின் காதலை ஏற்க மறுத்து அதே இடத்தில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

argue

ஒரு கட்டத்தில் தன் காதலி, நம்பிக்கை துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர், அந்தப் பெண்ணை, இளைஞர் இழுப்பதும், மாணவி, அவரை தள்ளி விட்டு கல்லூரிக்குச் செல்ல முயன்றதும் நடந்துள்ளது. அங்கிருந்தவர்கள் மாணவியிடம் இளைஞர் தகராறு செய்வதாக கருதி, இளைஞரிடம் விசாரித்துள்ளனர். பொதுமக்களின் விசாரணைக்கு பதில் எதுவும் சொல்லாத இளைஞர், தொடர்ந்து தன்னுடைய காதலியை கல்லூரிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதனால், ஆத்தரம் அடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை தாக்கினர். போலீசாருக்கும் இதுதொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து இளைஞரை மீட்டு விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞருக்கும், கல்லூரி மாணவிக்கும் பேஸ்புக் மூலமாக காதல் மலர்ந்துள்ளதையும், ஸ்டைலான உடையில், தன்னை அழகாக காட்டும் புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பியதால் அவரைக் காதலித்தேன். ஆனால் நேரில் சந்திக்கும் போது, என்னை ஏமாற்றிவிட்டார். புகைப்படத்தில் பார்த்ததைப் போன்று ஸ்டைலாக இல்லை. அதனால் காதலிக்க முடியாது’ என்று மாணவி உறுதியாக மறுத்து விட்டார். பிடிக்கவில்லை என்று கூறிய மாணவியை தொந்தரவு செய்யக் கூடாது என்று இளைஞரிடம் எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.