பேஸ்புக்கில் உத்தவ் தாக்கரே குறித்து இழிவாக பதிவு! இளைஞரின் தலையை மொட்டை அடித்த சிவ சேனா கட்சியினர்….

 

பேஸ்புக்கில் உத்தவ் தாக்கரே குறித்து இழிவாக பதிவு! இளைஞரின் தலையை மொட்டை அடித்த சிவ சேனா கட்சியினர்….

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் இழிவாக கருத்து பதிவு செய்த இளைஞரின் தலையை சிவ சேனா கட்சியினர் மொட்டை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15ம் தேதியன்று டெல்லி ஜாமியா பல்கலைகழகத்துக்குள் நுழைந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 17ம் தேதியன்று மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறுகையில், ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில் வடாலா பகுதியை சேர்ந்த ஹிரமானி திவாரி என்ற இளைஞர், தனது பேஸ்புக்கில் உத்தவ் தாக்கரேவின் கருத்தை விமர்சிக்கும் வகையில் அவர் குறித்து இழிவாக பதிவு செய்து இருந்தார். இந்த பதிவுக்கு பல மிரட்டல்கள் வந்ததையடுத்து திவாரி அதனை டெலிட் செய்தார். ஆனால் அந்த பிரச்சினை அதோடு முடியவில்லை.

சிவ சேனா தொண்டர்கள் (கோப்பு படம்)

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஹிரமானி திவாரியை தேடி அவர் வசிக்கும் சாந்தி நகருக்கு சிவ சேனா கட்சியினர் வந்தனர். திவாரியை கண்டுபிடித்ததுடன் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் திவாரியின் தலையை மொட்டை அடித்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக திவாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் திவாரி மீதும் சிவ சேனா கட்சியினர் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சமரசமாக செல்ல திவாரியுடன் சிவ சேனா கட்சியினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தனர்.