பேரு வைக்கிறதுக்கு முன்னே கொள்ளி வைக்கும் குடும்பம் -அடுத்தடுத்து ஆறு குழந்தை இறப்பால் அதிர்ச்சி ..

 

பேரு வைக்கிறதுக்கு முன்னே கொள்ளி வைக்கும் குடும்பம் -அடுத்தடுத்து ஆறு குழந்தை இறப்பால் அதிர்ச்சி ..

கேரளாவில் தம்மல் ரபீக் மற்றும் சப்னா தம்பதியினரின் “முதல் குழந்தை 6 மாதங்களில் இறந்தது, இரண்டாவது குழந்தை இறக்கும் போது வெறும் 55 நாட்கள் மற்றும் மூன்றாவது குழந்தை 25 நாட்களில்.இறந்தபோது,பிரேத பரிசோதனை நடத்துமாறு மருத்துவரிடம் கேட்டுக்கொண்டோம்.

கேரளா,மலப்புரத்தில் ஒரு குடும்பத்தில் ஒன்பது ஆண்டுகளில் ஒரு தம்பதியரின் ஆறு குழந்தைகள் இறந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது அந்த குடும்பத்தில் சமீபத்தில்  மூன்று மாத குழந்தை செவ்வாய்க்கிழமை இறந்ததையடுத்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து போலீசில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தம்மல் ரபீக் மற்றும் சப்னா தம்பதியினரின் “முதல் குழந்தை 6 மாதங்களில் இறந்தது, இரண்டாவது குழந்தை இறக்கும் போது வெறும் 55 நாட்கள் மற்றும் மூன்றாவது குழந்தை 25 நாட்களில்.இறந்தபோது,பிரேத பரிசோதனை நடத்துமாறு மருத்துவரிடம் கேட்டுக்கொண்டோம்.பிரேத பரிசோதனையில் வலிப்பு நோய் தாக்குதல் காரணமாக குழந்தை இறந்தது என்றனர்.இன்று காலை இறந்த ஆறாவது குழந்தை வரை இறப்புகள் இயல்பாக இருந்தது, இதில் எந்த மர்மமும் இல்லை அதனால்,நாங்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்போம் “என்று ரபீக்கின் சகோதரி நூர்ஜஹான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

child

“மூன்றாவது குழந்தையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டபோது  சில மரபணு பிரச்சினைகள் காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ” என்று மற்றொரு உறவினர் கூறினார்,எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள குடும்பம் தயாராக உள்ளது.

 “பிரேத பரிசோதனை செய்யப்படும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது.தற்போது இது இயற்கைக்கு மாறான மரணம் என்பதை எங்களால் கூற முடியாது.நாங்கள் யாரையும் காவலில் எடுக்கவில்லை.பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் தந்தையின் உறவினர் அளித்த புகாரின்  அடிப்படையில் நாங்கள் இந்த  வழக்கை விசாரிக்கிறோம்.போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், “என்று போலீஸ்  அதிகாரி கூறினார்.

kerala police