பேரு பெத்த பேரு, திட்டம் டப்பு லேது – ஜெயிப்பாரா ஜெகன்!

 

பேரு பெத்த பேரு, திட்டம் டப்பு லேது – ஜெயிப்பாரா ஜெகன்!

முதலீட்டாளர்களிடம் பேசி முதலீடுகளை குவிப்பார் என்று பார்த்தால், முந்தைய அரசாங்கம் கொண்டுவந்த பல திட்டங்களுக்கும் நோ மீன்ஸ் நோ சொல்லி கதவை அடைத்துவிட்டார். சந்திரபாபுவின் கனவு திட்டமான ஆந்திர தலைநகர் அமராவதியை அமர வதியாக்கிவிட்டார் ஜெகன். இது முதலீட்டாளர்களிடையே பீதியைக் கிளப்ப, ’ஐயம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்டு’ என்று 30 நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசர்களை வரவழைத்து தாஜா செய்யவேண்டியிருந்தது.

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு ஆச்சாம் கல்யாணம்ங்கிற மாதிரி, முன்னேபின்னே கேள்வியேபடாத ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை ஐபிஎல் ஏலத்தின்போது கோடிகள் கொட்டிக்கொடுத்து வாங்குவார்கள். சம்பந்தப்பட்ட வீரரும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் ஆட்டத்தில் இறங்கி டக் அவுட் ஆகி வெளியேறுவார். அதன்பின் அவரை கடைசிவரை களத்தில் இறங்கவிடாமல் ட்ரிங்க்ஸ் பாயாக வைத்துவிடுவார்கள் அல்லவா? அந்தமாதிரி அதிரிபுதிரி அறுதிபெரும்பான்மையோடு ஆந்திராவில் அரியணை ஏறிய ஜெகனமோகனும் சும்மா சொல்லக்கூடாது, ஆட்சிக்கு வந்தப் புதிதில் நாளொரு அதிரடியும் பொழுதொரு அறிவிப்புமாக கெத்து காட்டிவந்தார். ஆனால், அவர் சொன்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் எங்கே என்று தேடிப்பார்த்தால், போன் வயர் பிஞ்சுபோய் இருந்ததை கண்டுபிடிக்கலாம்.

Jagan's PPT to investors

இரண்டேகால் லட்சம் கோடிக்கு ஆந்திர பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதில், பற்றாக்குறையே 45,000 கோடிக்கு நிற்கிறது. 2014-15ல் ஒரு லட்சத்து 30,654 கோடியாக இருந்த மாநிலத்தின் கடன், 2018-19ல் ’நான் வளர்கிறேனே மம்மி’ என இரண்டு லட்சத்தைத் தாண்டி வளர்ந்து நிற்கிறது. இந்த இடர்பாடுகளுக்கு நடுவேதான், 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டங்களையும் முதல்வரான புதிதில் ஜெகன் அறிவித்தார். சரி, புதிய அரசு அமைந்திருக்கிறது, முதலீட்டாளர்களிடம் பேசி முதலீடுகளை குவிப்பார் என்று பார்த்தால், முந்தைய அரசாங்கம் கொண்டுவந்த பல திட்டங்களுக்கும் நோ மீன்ஸ் நோ சொல்லி கதவை அடைத்துவிட்டார். சந்திரபாபுவின் கனவு திட்டமான ஆந்திர தலைநகர் அமராவதியை அமர வதியாக்கிவிட்டார் ஜெகன். இது முதலீட்டாளர்களிடையே பீதியைக் கிளப்ப, ’ஐயம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்டு’ என்று 30 நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசர்களை வரவழைத்து தாஜா செய்யவேண்டியிருந்தது. இவ்வளவையும்மீறி ஜெகனால் மாயஜாலாம் செய்ய முடியுமா? காத்திருப்போம்!