பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுநருக்கு மாரடைப்பு! பேருந்து விபத்தில் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்!! 

பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுநருக்கு மாரடைப்பு! பேருந்து விபத்தில் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்!! 

சென்னையில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப்பேருந்து சாலையோரம் சென்றுகொண்டிருந்த  கார்கள் மீது மோதியது. 

சென்னையில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப்பேருந்து சாலையோரம் சென்றுகொண்டிருந்த  கார்கள் மீது மோதியது. 

வேளச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தை ராஜேஷ் கண்ணா என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். 570 தடம் எண் கொண்ட அந்த மாநகர பேருந்து வேளச்சேரி 100 அடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்தை நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் பேருந்து சில அடி தூரம் சென்று நின்றது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த  கார்களின் மீது அடுத்தடுத்து மோதியது. நல்வாய்ப்பாக சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

bus

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பேருந்திலிருந்த பொதுமக்களையும், ராஜேஷ் கண்ணாவையும் பேருந்திலிருந்து மீட்டனர். ஆனால் மாநகரப் பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் கண்ணன் மாரடைப்பால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.