பேருதான் ஃபேமிலி கள்ளுக்கடை…கேரளாவைக் கலக்கும் சேச்சிகள்…! 

 

பேருதான் ஃபேமிலி கள்ளுக்கடை…கேரளாவைக் கலக்கும் சேச்சிகள்…! 

முல்லைப்பந்தல் கள்ளுக்கடைக்கு 80 வயதாகிறது.கேரளத்திலேயே புகழ் பெற்ற கள்ளுக்கடை என்று செல்லலாம்.கொச்சியில் இருந்து 15 கிமீ போனால், திருப்பூணித்துறை.அங்கே போய் உதயம்பேரூர் என்று கேளுங்கள்.அங்கே இருக்கும் மாங்கா ஜங்ஷனில் இருந்து நடந்து போகும் தூரம்தான் முல்லப்பந்தல்.

முல்லைப்பந்தல் கள்ளுக்கடைக்கு 80 வயதாகிறது.கேரளத்திலேயே புகழ் பெற்ற கள்ளுக்கடை என்று செல்லலாம்.கொச்சியில் இருந்து 15 கிமீ போனால், திருப்பூணித்துறை.அங்கே போய் உதயம்பேரூர் என்று கேளுங்கள்.அங்கே இருக்கும் மாங்கா ஜங்ஷனில் இருந்து நடந்து போகும் தூரம்தான் முல்லப்பந்தல்.

ஒரு காலத்தில் மொத்த கடைக்குமே மேல்கூரை முல்லை கொடிப் பந்தல்தானாம்.இன்றைய தலைமுறை மலையாளிகளுக்கு மழையில் நனைவதிலும் வெய்யிலில் காய்வதிலும் அவ்வளவு விருப்பமில்லாமல் போய்விட்டதால் இப்போது மேற்கூரைகள் அமைத்து முல்லைப் பந்தல்கள் அகற்றப்பட்டு விட்டன.வாசலில் மட்டும் பழைய ஞாபக வாசனைக்காக ஒரு முல்லைப் பந்தல் இருக்கிறது.

food

உள்ளே போனால் வண்ணமயமாக இருக்கிறது இந்தக் கள்ளுக்கடை! மலையாளிகள் குடும்பம் குடும்பமாக இங்கே வருகிறார்கள்.கள்ளை விட இங்கே பரிமாறப்படும் உணவு வகைகள்தான் அதற்கு காரணம்.கள்ளும் தருகிறார்கள்.

kerala food

ஒரு மண் குடுவையில் கள்ளும் ஊத்தி குடிக்க ஒரு கண்ணாடி கிளாஸும் வைத்துவிட்டு,ஒரு பெரிய பட்டியலே வாசிக்கிறார்கள்.அனேகமாக இங்கே கிடைக்கும் வெரைட்டி இந்தியாவில் வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை.ஒரு முக்கியமான விஷயம் வெஜ்ஜிடேரியன்கள் இதோடு விலகிவிடுங்கள்!

food

இங்கே கள்ளும்,கப்ப என்று மலையாளிகளால் செல்லமாக அழைக்கப்படும் கப்பை கிழங்கு என இரண்டே இரண்டு ஐட்டங்கள் மட்டுமே சைவம். அந்தளவுக்கு பியூர் நான் வெஜிடேரியனாக மெயின்டைன் பண்ணுகிறார்கள்.உதாரணத்திற்கு நீங்கள் ‘லிவர் ஃபிரை’ என்றால்,’ சிக்னா,மட்டனா,பீஃபா’ என்பார்கள்!

ராதாம்ம சேச்சியின் தலைமையில் ஏழெட்டு சேச்சிகள் பத்து அடுப்புகளில் பொரித்தும் வருத்தும் குவிக்கிறார்கள். ஆடு,மாடு,கோழி,வாத்து, வகை வகையாய் மீன்கள்,எறா,புறா,முயல்,சிப்பி,கருவாடு எல்லாம்,எல்லாம் கிடைக்கும் விதவிதமான ரகத்திலும்,பதத்திலும் சுடச்சுட கிடைக்கும்.

food

ஆனாலும்,நெய்மீன் பொள்ளிச்சது கக்கதோறன் ( சிப்பி),கப்ப மீன் முளகிட்டது,தேங்காய் சில்லுகள் வெட்டிப்போட்ட சிரியன் பீஃப்,மீன் தலைகறி என்று சில ஐட்டங்களுக்கு எப்போதும் கிராக்கிதான் இங்கே.இவற்றை நாடன் கறி என்கிறார்கள்.அதாவது பாரம்பரிய கேரள உணவுவகைகள்.
பெயர்தான் கள்ளுக்கடை, அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.அடுத்த முறை கேரளா போனால்,இந்த முல்லைப்பந்தலுக்கு அவசியம் போய் வாருங்கள்…வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமையும்.